மன்னை ப. நாராயணசாமி அவர்கள்

(19.10.1919 – 17.10.1993)
தஞ்சைப் பெரியார் • தன்மானத் தளகர்த்தர் • சுயமரியாதை சுடரொளி • முன்னாள் அமைச்சர்

  • தந்தை பெரியாரின் சீடராய், பேரறிஞர் அண்ணாவின் இளவலாய்., டாக்டர் கலைஞரின் உற்ற தோழனாய் இருந்து ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திராவிட இயக்க காவலராக திகழ்ந்தவர்.
  • தீண்டாமையை எதிர்த்துப் போராடியவர்.
  • சுயமரியாதைத் திருமணங்களை அதிக அளவில் தலைமை ஏற்று நடத்தியவர்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டம், கள்ளக்குடி போராட்டம், மிசா போராட்டம், மும்முனைப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், ஈழத்தமிழர் உரிமை மீட்புப் போராட்டம்,கீழ்வெண்மணி போராட்டம், பேருந்து தொழிலாளர்கள் போராட்டம், விவசாயக் கூலி உயர்வு போராட்டம், காவிரி நதி நீர் உரிமை மீட்புப் போராட்டம், நங்கவரம் போராட்டம், சட்ட நகல் எரிப்பு போராட்டம் போன்ற பல போராட்டங்களில் களம் கண்டு சிறை சென்றவர்.
  • இப்போராட்ட நிகழ்வுகள் “நெஞ்சுக்கு நீதி” நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • 1970 – வாரியத் தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (TNCMF).
  • 1972 – சட்ட மேலவை உறுப்பினர்.
  • தமிழக அமைச்சர் - உணவுத்துறை, வேளாண்மைத்துறை உள்ளாட்சித்துறை வீட்டுவசதித்துறை, கூட்டுறவுத்துறை, காதி போன்ற பலதுறைகளில் பொறுப்பு வகித்தவர்
  • கோவை அரசு வேளாண்மைப் பல்கலைக்கழக இணைவேந்தர் பொறுப்பு வகித்தவர்
  • 1985 – “தந்தை பெரியார் விருது” பெற்ற முதல் நபர்.
  • தி.மு.க அறக்கட்டளையின் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர்.

மன்னை ப. நாராயணசாமி அவர்கள் பெயரில் நினைவாக உள்ள அரசு வளாகங்கள்

  • மன்னார்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் முழு உருவ வெண்கலச் சிலை
  • மன்னார்குடி நகராட்சி தலைமை அலுவலக கட்டிட வளாகம் மன்னை ப.நாராயணசாமி நினைவு வளாகம்
  • மன்னை ப. நாராயணசாமி நினைவு வளாகம்
  • மன்னை ப. நாராயணசாமி அரசு உயர்நிலைப்பள்ளி – ஒரத்தநாடு
  • மன்னை ப. நாராயணசாமி நகர கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்
  • மன்னை ப. நாராயணசாமி நகர்
  • மன்னை ப. நாராயணசாமி நூற்றாண்டு நகராட்சி பூங்கா
  • மன்னை நினைவாக "மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்
  • மன்னை ப.நாராயணசாமி கல்வி அறக்கட்டளை
  • மன்னை ப.நாராயணசாமி இணை மருத்துவக்கல்லூரி
  • மன்னை ப.நாராயணசாமி மேல்நிலைப்பள்ளி
  • பெரியவர் மன்னை அவர்களின் பெற்றோர்களால் எளியோருக்கு நிறுவப்பட்ட அன்னசத்திரம் திராவிட இயக்கத்தின் வளர்ப்புத் தொட்டிலாக விளங்கியது. திராவிட இயக்கத்தலைவர்கள் தங்கி இயக்கம் வளர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். அன்னசத்திரம் -திராவிட இயக்க வரலாற்றுச் சரித்திரம்."

“மன்னை எனது அன்னை”

  • ஊர் பெயரைத் தனிப்பெயராகக் கொண்ட பெருமை “மன்னைக்கு” உண்டு.
  • பொறுப்பாகவும், நாணயமாகவும், சிக்கனமாகவும். ஒப்படைத்த காரியத்தை வெற்றியோடு முடித்துத்தரும் திறன பெற்றவர்.
  • அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பும், ஆற்றிய தொண்டும் அளவிட முடியாதது.
  • புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அனைத்தும் மனப்பாடம்.
  • கிராமப்புறங்களில் அவர் செல்லாத ஊரோ, பேசாத பொதுக்கூட்டங்களோ கிடையாது.
  • கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர்.
  • மலை குலைந்தாலும் நிலை குலையாத கொள்கைப் பிடிப்பு கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளமும் கொண்டவர் - நம் மன்னை
  • பேரறிஞர் அண்ணாவின் பேரன்பைப் பெற்ற தன்மானக் காவலர்.
  • தஞ்சைத் தங்கம் மன்னை! அதுவும் பத்தரை மாற்றுத் தங்கம் பேரறிஞர் அண்ணாவின் பேரன்பைப் பெற்ற தன்மானக் காவலர். என்னைத் தட்டிக் கொடுத்துக் கழகத் தொண்டனாக வளர்த்தவர்.
– தமிழர் முதல்வர் டாக்டர் கலைஞர் (1973)

செம்மல் – வீரர் – செயலாளர்

அஞ்சா நெஞ்சுடன் எத்தகைய தியாகத்திற்கும் தன்னை ஒப்படைத்துள்ள "செம்மல்" அவர். கள்ளமில்லா நெஞ்சுடன் கனிவான சொல்லுடன் இயக்கத்தின் வலிமைக்கும். பொலிவுக்கும் துணை நிற்கும்"செயலாளர்" அவர். இனப்பற்றை, மொழிப்பற்றை காப்பாற்றும் ''வீரர்'' - நம் மன்னை.

– பேராசிரியர் க.அன்பழகன் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் – 21.09.1975)

இனப்பகைவருக்கோர் எரிகோல்

சிலர் உலகம் அழிந்தாலும் வாழ்கிறார்கள் அவர்களை உலகத்தில்"மன்னி நிலைப் பெற்றவர்கள்" என்று இலக்கியம் புகழும் - இந்த இலக்கியச் சிந்தனைக்கு செயல் வடிவமாக நம் தலைமுறையில் ஒரு "மன்னை" வாழ்கிறார்.

– தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தலை காத்த தங்கம்

சுயமரியாதை இயக்க தொண்டனாய் ஆரம்பித்து, ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக வளர்ந்து, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்து "தளபதி மன்னை"- நான் தலைமறைவாய் இருந்த காலத்தில் தங்குமிடம் தந்து தாராளமாய் பல உதவிகள் செய்த "மாமனிதர் மன்னை"- துன்பத்தில் துணை நிற்கும் 'தூயவர்"

– மணலி சி.கந்தசாமி - எம்.எல்.ஏ.கம்யூனிஸ்ட்

இயக்கம் காத்த தளபதி

பார்வைக்குச் சிம்மம் - பழகுவதற்கு பசு, சாதி மதத்தில் சிக்காதவர் - மூடநம்பிக்கையை முடக்கியவர் சிம்மாசனத்திலும் அமருவார் - சிறைக்குள்ளும் உலவுவார் “அரசியல் என்றால் நாணயம் - நாணயம் என்றால் மன்னை"

– தந்தை பெரியார்

என்னை மயக்கிய மன்னை

அன்னையின் பாச நெஞ்சம்
அழகியின் சிரிப்பு வண்ணம்
தென்னையின் நிமிர்ந்த கொள்கை
சேவையில் பரியின் வேகம்
பின்னையோர் உவமை யில்லா
பெருந்தொண்டன் தலைவ னாக
மன்னையார் வளர்ந்து, இன்று
மந்திரி பதவி பெற்றார்.
இவர்க்கிது நியாயம் என்று
எவருமே உரைக்கும் வண்ணம்
அவர்க்கிது கிடைத்த தேனும்
அகந்தையில் லாமற் காத்து
சுவர்க்குறிச் சித்தி ரம்போல்
தூய்மையாய் விளங்கு கின்றார்!
எவர்க்குமே நண்ப ரான
இனியவர் வாழ்க! வாழ்க!

– கவியரசர் கண்ணதாசன்

மாற்றாரும் போற்றும் மாண்புடையவர் -சீறிப்பாயும் சிறுத்தை

திராவிட இயக்க கொள்ளைகளை வேறூன்றச்செய்து. அவற்றை ஆல் போல் தழைத்து நிற்கச் செய்த பெருமைக்குரியவர்களில் குறிப்பிடத்தக்கவர். கொண்ட கொள்கையை கண்ணிமைபோல் கட்டிக்காத்து, வளர்த்து வந்த தலையாய வீரர்களில் ஒருவர். தொண்டனுக்குத் தொண்டனாக, செயல் வீரர்களுக்குத் தலைவனாக, கொள்கைக்குத் தீங்கு வரும்போது சிறுத்தையெனச் சீறிப்பாய்பவர்.


ஆடம்பரத்திற்கோ, ஆரவாரத்திற்கோ சிறிது கூட இடம் அளிக்காமல், அடக்கத்திற்கும் அமைதிக்கும் இருப்பிடமாகத் திகழ்பவர். நீதிக்குப் பரிந்து பேசுவர். நேர்மைக்கு உடந்தையாக நிற்பார். நாணயப்பண்பிற்கு மதிப்பளிப்பார், அவர் எல்லோராலும் விரும்பப்படும்

ஒரு முழு மனிதராவார்" - நம் மன்னை
டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் (கல்வி அமைச்சர், தமிழக அரசு - 1975)

தமிழக அமைச்சராக பெரியவர் மன்னை ப.நாராயணசாமி அவர்கள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள். சமூகப் பணிகள்

  • பாமணி உர ஆலை
  • இராசகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி
  • இராசகோபாலசுவாமி திருமண மண்டபம்
  • நவீன அரிசி ஆலை (MRM) சுந்தரக்கோட்டை
  • அரசு மருத்துவமனை விரிவாக்கம்
  • நீர்த்தேக்கத் தொட்டிகள்
  • இழுவை பணிமனை (டிராக்டர் ஓர்க்ஷாப்)
  • மாமன்னர் இராசராச சோழனுக்கு அரசு சார்பாக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் சிலை அமைக்க பெரும் பங்காற்றியவர்
  • தென்னிந்தியாவில் முதல் முறையாக கோவை வேளாண்மைப் பல்கலைகழகத்தில், வேளாண்மை பொறியியல் பட்டபடிப்பு (B.E. Agn) மற்றும் தோட்டக்கலை பட்டபடிப்பு (B.Sc. Horti) தொடங்க செய்தவர்
  • தொழிற்சங்கம்(LPF) தோற்றுவித்த பெருமைக்குரியவர்
  • வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தபோது பெருமைமிக்க 'சென்னை அண்ணாநகரை உருவாக்கி, விரிவாக்கம் செய்தவர்
  • கீழ்வெண்மணி கொடுமைச் சம்பவத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியவர்
  • காவிரிநதி நீர் பிரச்சனைக்கு உச்சந்திமன்றத்தில் விவசாயிகள் சார்பாக முதன்முதலில் சட்ட போராட்டம் தொடங்கியவர்
  • நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்தை செல்வாக்கை தன் அரசியல் நெறியால் நொறுக்கியவர். இச்செயல் அவரின் 'அரசியல் ஆளுமைக்கு'ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

Mannai P. Narayanasamy

(19.10.1919 – 17.10.1993)
Thanjai Periyar | Champion of Self-Respect | Former Minister

  • A devoted disciple of Periyar, a close associate of Arignar Anna, and a trusted companion of Dr. Kalaignar. He emerged as a guardian of the Dravidian Movement in the then undivided Thanjavur district.
  • Fought strongly against untouchability.
  • Conducted and presided over numerous Self-Respect marriages.
  • Participated in and was imprisoned during several major public movements including the Anti-Hindi Agitation, Kallakudi Protest, MISA Movement, Multi-Front Agitation, Black Flag Protest, Eelam Tamil Rights Movement, Keezhvenmani Protest, Transport Workers’ Movement, Agricultural Labour Wage Movement, Cauvery Water Rights Movement, Nangavaram Protest, and several other social justice struggles.
  • These historical struggles were documented in the book *“Nenjukku Neethi.”*
  • 1970* – Chairman, Tamil Nadu Cooperative Marketing Federation (TNCMF).
  • 1972* – Member of Legislative Council.
  • Served as Minister for Food, Agriculture, Local Administration, Housing, and Cooperation in Tamil Nadu.
  • Served as Pro-Chancellor of Coimbatore Agricultural University.
  • *1985* – First recipient of the prestigious *Periyar Award*.
  • Member of the DMK Trust Property Protection Committee.
Public Welfare Projects Introduced During His Tenure as Minister
  • Pamani Fertilizer Plant
  • Rajagopalaswamy Government Arts College
  • Rajagopalaswamy Renovation Mandapam
  • Modern Rice Mill (MRM) – Sandhanakottai
  • Expansion of Government Hospital Facilities
  • Construction of Water Storage Tanks
  • Tractor Workshop Facilities
  • Played a major role in installing the statue of Rajaraja Chola at Thanjavur Big Temple complex.
  • Instrumental in launching *B.E. Agricultural Engineering* and *B.Sc. Horticulture* programmes at Agricultural University.
  • Founder of Labour Progressive Federation (LPF).
  • Played a major role in establishing *Anna Nagar* housing development.
  • Extended support to agricultural labourers and farmers.
  • Initiated legal efforts related to Cauvery River water rights.
Government Institutions and Public Places Named After Him
  • Bronze Statue at Mannargudi Municipal Bus Stand
  • Mannai P. Narayanasamy Memorial Complex
  • Mannai P. Narayanasamy Government Higher Secondary School – Orathanadu
  • Mannai P. Narayanasamy Cooperative Housing Society
  • Mannai P. Narayanasamy Nagar
  • Mannai P. Narayanasamy Centenary Municipal Park
  • “Mannai Express” Train
  • Mannai P. Narayanasamy Educational Trust
  • Mannai P. Narayanasamy Allied Medical College
  • Mannai P. Narayanasamy Higher Secondary School
Mannai Means Mother
  • He earned the rare distinction of carrying the identity of his hometown as his own name.
  • Known for responsibility, integrity, simplicity, and excellence in completing assigned work.
  • Enjoyed deep public acceptance in rural regions.
  • Had memorized the works of poet Bharathidasan.
  • A man of unwavering principles and pure character.
  • A self-respect leader admired and trusted by Arignar Anna.
– Dr. Kalaignar (1973)
Scholar – Warrior – Organizer

A fearless leader who dedicated himself to ideals.
A person who strengthened the movement through wisdom, humility, and action.
A protector of language, identity, and social justice.

– Prof. K. Anbazhagan (Minister for Public Welfare – 21.09.1975)**
A Torch Against Social Division

Literature celebrates individuals whose values live beyond time.
Mannai became a living example of those ideals through action and public service.

– Kundrakudi Adigalar
The Golden Guardian

Began as a Self-Respect Movement volunteer and evolved into a respected public leader.
Lived with discipline, humility, and dedication.
Stood firmly for justice, honesty, and public welfare.

– Dr. R. Nedunchezhiyan (Education Minister, Government of Tamil Nadu – 1975)